ஹட்டனில் பாரிய தீ விபத்து
ஹட்டன் பிரதான நகரில் உள்ள காலணி கடை ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று(18) பிற்பகல் 1:00 மணியளவில் இந்த தீ விபத்து நேர்ந்துள்ளது.
இதனையடுத்து, ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், ஏராளமான காலணிகள் தீக்கிரையாகியுள்ளன.
தீ விபத்தில் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள காலணிகள் முற்றிலுமாக எரிந்து சேதமாகியுள்ளதாகவும், சேத விபரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
