ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் 28 வயது குடும்பஸ்தர் பலி - பெண்ணொருவர் வைத்தியசாலையில்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு முன்னாள் உள்ள பாதசாரி கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில் காயமடைந்த பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் நோர்வூட் பகுதியை சேர்ந்த குபேரன் கருணாகரன் (28 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.
ஹட்டன் - விக்டன் பகுதியிலிருந்து ஹட்டன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அதே பக்கத்தில் நடந்து சென்ற நபர் மீது மோதிய நிலையில் அவர் வீதியில் சென்ற பெண் மீது விழுந்து நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் மோதி வீதியில் விழுந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து பேருந்து சாரதி பேருந்தினை நடு வீதியில் விட்டு விட்டு பொலிஸ் நிலையம் நோக்கி ஓடியுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேருந்தும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
