வடக்கு - கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு (Video)
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி ஹர்த்தால் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கான அழைப்பை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் (02.02.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
ஹர்த்தால்
எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி குறித்த தினத்தில் கடைகள், வர்த்தக நிலையங்களை பூட்டி போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஹர்த்தால் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அன்றைய தினம் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
