தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கியே தீருவோம்! அநுர அரசு திடசங்கற்பம்
தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கியே தீருவோம் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்குரிய முயற்சிகள் தொடரும். இந்த விடயத்தில் கடந்தகால அரசுகளை விட எமக்கே கூடுதல் பொறுப்பு உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை
கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் கூட வடக்குக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.
எமது பிரச்சினையை அரசு உணர்ந்துள்ளது, எனவே, நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டால் தான் பிரச்சினைகள் முழுமையாகத் தீரும். அதற்குரிய நடவடிக்கையையே நாம் முன்னெடுத்து வருகின்றோம்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
