இந்திய ஆதரவு கருத்தால் ஹர்ஷவுக்கு ஏற்பட்ட நிலை! வெளிப்படுத்தப்பட்ட கடும் நிலைப்பாடு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னை தேச துரோகியாக சித்தரிக்க முயல்வதாக பேராசிரியர் ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தியாவை இழிவுப்படுத்த வேண்டாம்
“கடந்த நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு பின்னர் நான் பேசிய இந்தியாவை இழிவுப்படுத்த வேண்டாம் என்ற சொல்லை வைத்துக் கொண்டு அரசாங்கம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என்னை வீழ்த்தவும் அவதூறுப்படுத்த சமூக வலைதளங்களில் பரப்புரை விடுக்கின்றனர்.
இந்தியாவுக்கு அமெரிக்காவினால் அதிகரித்த வரியை விதித்துள்ளதால் அந்த நாடு பெரும் இக்கட்டான நிலையில் இருப்பதாலும் நாம் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது துணை நின்றவர்கள் என்பதாலே நான் அவ்வாறு கூறினேன்.
அன்று நாடாளுமன்ற அமர்விலும் இந்தியாவின் பாரிய வரியை குறித்தே பேசப்பட்டது. அவற்றை அவதானித்தே நான் அப்படி கூறினேன். இதை நான் ஒளிந்து சொல்லவில்லை, நாடாளுமன்றத்தில் தான் சொன்னேன்.
ஆங்கில மொழிபெயர்ப்பு
நாங்கள் சமூக ஊடகங்களில் அச்செய்தியை வெளியிட்டது தவறு மேலும் அதில் நாம் ஆங்கில மொழிபெயர்ப்பையும் செய்திருந்ததால் அது பரவலாக்கப்பட்ட செய்தியானதால் அவ்வாறு மொழிபெயர்ப்பு செய்தமை தவறு என்கிறது அரசாங்கம்.
இது இந்தியாவிலும் பரவலானதும் தவறு என்கிறது. இந்த அரசாங்கம் என்ன செய்ய முயற்சிக்கிறது?என்று தெரியவில்லை.
பேச்சு சுதந்திரத்தை, சுயாதீனமாக கருத்து தெரிவிப்பதை மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரம் தெரியாதவர்கள் என்னை மடுப்படுத்த முயல்கின்றனர்.
அரசாங்கத்தின் இச்செயற்பாடுகளால் என்னை கட்டுப்படுத்த முடியாது. அவை அரசாங்கத்தின் புதிய பாதையாகவும் தென்படுகிறது” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



