சிறைச்சாலைக்கு சென்ற ஹர்ஷ டி சில்வாவை வெளியேற்றிய அதிகாரிகள்
கொழும்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆரப்பாட்டக்காரரான பெத்தும் கர்னரைப் பார்க்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா திரும்பிச் செல்ல நேரிட்டது.
சந்தேக நபரை பார்க்க ஹர்ஷவுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் சந்தர்ப்பம் வழங்காததே அதற்கு காரணமாகும்.
பெத்தும் கர்னரை எதிர்வரும் நாட்களில் அடையாள அணிவகுப்புக்கு முற்படுத்த உள்ளமையினால் அவரை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
உறுப்பினரின் சிறப்புரிமையின் கீழ் சந்தேக நபரை பார்க்க சந்தர்ப்பம் வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை நிராகரித்த அதிகாரிகள், சிறைச்சாலை சட்டத்திற்கமைய, சந்தேகநபர் ஒருவரை அடையாள அணிவகுப்புக்கு முற்படுத்த உள்ள நிலையில், சந்தேக நபரின் இரத்த உறவினர்களுக்கு மாத்திரமே காணக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக சந்தேகநபரை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காததால், சிறைச்சாலைக்கு சென்ற ஹர்ஷ டி சில்வா அங்கு பயன்படுத்தும் புத்தகத்தில் அது பற்றிய குறிப்பை வைத்து விட்டு சிறையிலிருந்து வெளியேறினார்.
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam