இலங்கைக்கான உதவி! மாலைத்தீவு விடுத்த கோரிக்கையை நிராகரித்த சவூதி!
இலங்கையை நிராகரித்த சவூதி
இலங்கைக்கு உதவுமாறு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் மொஹமட் நஷீத் விடுத்த கோரிக்கையை சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் அல் சவுத் நிராகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நஷீத், இதனை தன்னிடம் கூறியதாக ஹர்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிடம் சரியான திட்டம் இல்லை என்று சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் நஷீடிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ தெரிவித்தார்.
சொத்துப்பட்டியலை கேட்ட ஐக்கிய அரபு ராச்சியம்
இதேவேளை ஐக்கிய அரபு ராச்சியத்தின் ஆட்சியாளருடனும் நஷீட் பேசியதாகவும், இதன்போது இலங்கை விற்க தயாராக உள்ள சொத்துக்களின் பட்டியலை அவர் கோரியதாகவும் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் மொஹமட் நஷீத்துடன் கலந்துரையாடியிருந்தார்.
இந்த கலந்துரையாடலின் போது, வெளிநாட்டு நாடுகளிடமிருந்து இலங்கைக்கான நிவாரணங்களைப் பெறுவதற்கு நஷீட் உதவ முன்வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க அவரை நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியா மன்னர் மருத்துவமனையில் அனுமதி



