ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 3 இலட்சம் ரூபா அபராதத்தையும் விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போனமை தொடர்பில் பல கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் தொடர்புடைய அஜித் பிரசன்ன மற்றும் இரண்டு கடற்படை புலனாய்வு அதிகாரிகள் உட்பட மூன்று பிரதிவாதிகள் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி சாட்சிகளை மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சரீரப்பிணை
இந்நிலையில், இன்றைய தினம் அஜித் பிரசன்னவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 2021 ஜனவரியில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் அஜித் பிரசன்ன
500,000 ரூபாய் சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் News Lankasri
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri