அடுத்த வருடம் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள நம்பிக்கை
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி கிடைத்தவுடன் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பணியாளர் மட்ட உடன்படிக்கை
இந்தநிலையில், இலங்கையுடனான பணியாளர் மட்ட உடன்படிக்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைக்கும் என அரசாங்கம் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை விட, இலங்கை மீண்டுமொருமுறை ஏனைய கடன் வழங்குனர்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் முக்கியமானது என்றும் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நிதி உதவிக்கான சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியம்
நிர்ணயித்த டிசம்பர் காலக்கெடுவை இலங்கை தவறவிட்டது.
எனினும் அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர் இலங்கை அதன் கடனாளிகளுடன் ஒரு
உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தி வருகிறது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 4 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
