கட்சி தீர்மானங்களை புறக்கணித்த ஹரீஸ்: விளக்கம் கோரும் முஸ்லிம் காங்கிரஸ்
புதிய இணைப்பு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களைப் பொருட்படுத்தாத காரணத்தால் அதற்குச் சரியான விளக்கமளிக்குமாறு கோரி எச்.எம்.எம். ஹரீஸுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பரினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், கட்சியின் தலைவரின் உத்தரவுப்படி கட்சியின் அங்கத்துவத்திலிருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் ஹரீஸுக்கு இந்தக் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸை(H. M. M. Harees) தற்காலிகமாக இடைநிறுத்தக் கட்சித் தலைமை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் எழுத்து மூலம் இன்று அவருக்கு அறிவிக்கப்படவுள்ளது.
கட்சி கூட்டம்
ஓட்டமாவடியில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.