கொழும்பில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்
கொழும்பில் நடைபெற்ற பில்லி பெர்னாண்டோ இசை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காணொளி வெளியாகியுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சி ''2FORTY2 LIVE - The Year End Party' என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது
இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது பதிவு செய்யப்பட்ட ஒரு காணொளியில், முன்னாள் அமைச்சர் ஹரின், யாரோ ஒருவரை எதிர்கொள்ள முயற்சிக்கும் போது அவர் தடுத்து நிறுத்தப்படுவது காட்டப்படுகிறது.
தவறான வார்த்தைகள்
அத்துடன், இந்த வாக்குவாதத்தின் போது ஹரின் பெர்னாண்டோ தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் கேட்க முடிகிறது.
அதேநேரம், ஹரின் பெர்னாண்டோ, இந்த சம்பவத்தின் பின்னர் வெளியே அழைத்துச் செல்லப்படும்போது பலர் அவரை கேலி செய்வதையும் கேட்கமுடிகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |