அமைச்சரவையில் இருந்து விலக தீர்மானத்துள்ள ஹரின்
அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சு பதவிகளில் இருந்து விலகும் இவர்கள் புதிய அரசியல் பயணம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கரு ஜயசூரியவின் தலைமையிலான அமைப்பில் இணைய தீர்மானித்துள்ள ஹரின்
அமைச்சரவையில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர், கரு ஜயசூரிய தலைமையிலான நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பில் இணைய தீர்மானித்துள்ளனர்.
கரு ஜயசூரிய தலைமையிலான அமைப்பினர் முன்வைத்துள்ள நாட்டுக்கான திட்டம் சிறந்தது எனவும் எதிர்காலத்தில் அரசியலில் இருந்து விலகி அவர்களுடன் இணைய எதிர்பார்ப்பதாகவும் ஹரின் பெர்னாண்டோ கூறியிருந்தார்.
அதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்துடன் முழுமையான அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் அமைச்சு பதவிகள்
இதன் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்களை தவிர எதிர்க்கட்சியை சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தி, சில தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 10 பேர் அரசாங்கத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமானுக்கும் அமைச்சு பதவி வழங்கப்படலாம் என பேசப்படுகிறது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
