அனர்த்தத்தின் பின்னரான நெருக்கடி: அபாய எச்சரிக்கை விடுக்கும் ஐ.தே.க
நெருக்கடி முகாமைத்துவத்தை அரசாங்கம் முறையாக செயற்படுத்தவில்லை என்றால் நாடு பாரிய பின்னடைவை சந்திப்பதை யாராலும் தடுக்க முடியாது என ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிச்செயலாளர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய அவர்,
கோட்டாபய செய்த விதம்
கோவிட் தொற்றை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய முறையாக கட்டுப்படுத்தினார். ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட நெருக்கடியை முகாமைத்துவம் செய்யாததால் விரட்டியடிக்கப்பட்டார்.

அதனால் நெருக்கடியின் போது நாங்கள் தான் ராஜாக்கள் என நினைத்து கொண்டு சமூக ஊடகங்களை பார்த்து செயற்பட்டால். பாரிய அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது என அரசுக்கு அறிவிக்க விரும்புகின்றோம்.
நெருக்கடி முகாமைத்துவம்
நெருக்கடி முகாமைத்துவத்தின் போது விரும்பத்தகாத தீர்மானங்கள் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் தேர்தல் தோல்விகள் ஏற்படலாம்.எனக்கும் அப்படிதான் நடந்தது.ரணிக்கும் அது தான் நடந்தது.

அதனால் அரசாங்கத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவு தெரிவிக்க தயாராக இருக்கிறோம். பிரச்சினை அவர்களுடையதாக இல்லாத வரை, பதில் தத்துவார்த்தமானது.
இது அரசியல் ரீதியாக போராட வேண்டிய நேரம் அல்ல.அரசாங்கத்திலுள்ள அனுபவமில்லாத குழுவிற்குப் பதிலாக முதிர்ந்த அரசியல் குழுக்களை ஒன்றிணைத்து விவாதம் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.