லேர்ன் வித் ரணில்.. களத்தில் இறங்கிய ஹரின்
'லேன் வித் ரணில்' புதிய திட்டத்துடன் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற புதிய பிரதி பொதுச் செயலாளராக பதவியேற்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர், புதிய பரிமாணத்திற்கு கட்சியை கொண்டு செல்வதற்காக தலைவர் எனக்கு புதிய பதவியை ஒன்றை தந்துள்ளார்.ஒரு வருடமாக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருந்தேன்.
புதிய பரிமாணம்
அந்த ஒரு வருடமாக நாட்டுக்கு என்ன செய்யலாம் என அதிகம் சிந்தித்தேன்.ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டில் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைக்கும் தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டுக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்து முடித்துள்ளார்.எமக்கு தான் அடுத்த கட்டத்தை நகர்த்தி செல்ல வேண்டியுள்ளது.
ஆறு மாதங்களில் நாடு முழுவதும் புதிய இளம் தலைவர்களை ஐக்கிய தேசிய கட்சியில் இணைத்து மாபெரும் சக்தியாக்க உள்ளோம்.
ஒரு வேலையையும் செய்ய விடாத,செய்யத் தெரியாதவர்களே இன்று ஆட்சியில் இருக்கின்றனர்.கடந்த ஆட்சிக் காலத்தில் சுங்கத்தில் ஸ்மாட் கேட் அமைக்க முயற்சித்த போது அன்றைய தொழிற் சங்கங்கள் விடவில்லை.
இவ்வாறான ஆட்சியாளர்கள் இன்று திறந்த பொருளாதார கொள்கையில் செல்கின்றனர் என்றார்.