ரணிலுடன் பேச்சு வார்த்தை நடத்திய ஹரின் பெர்னாண்டோ
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரின் பெர்னாண்டோவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடந்துள்ளதாக தெரியவருகிறது.
இரண்டு கட்சிகளை ஒன்றாக இணைப்பது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனிப்பட்ட ரீதியில் ஹரின் பெர்னாண்டோ, ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாகவும் கட்சிக்காக இந்த சந்திப்பு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எப்படியும் இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும் என ஹரின் பெர்னாண்டோ ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்போது இந்த விடயம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவிடம் கலந்துரையாடி தனக்கு அறிவிக்குமாறும் அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என ரணில் விக்ரமசிங்க கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



