ஹரின் பெர்னாண்டோ கறுப்பு சால்வை அணிந்திருக்காததை சுட்டிக்காட்டிய ஆளும் கட்சி எம்.பிக்கள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நியாயம் கிடைக்கும் வரை தான் கறுப்பு சால்வை அணிய போவதாக கூறியிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தனது உரையை ஆரம்பிக்கும் போது கறுப்பு சால்வையை அணிந்திருக்கவில்லை என்பத ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அப்போது கருத்து வெளியிட்ட ஹரின் பெர்னாண்டோ “ சால்வை நினைவுக்கு வருமா என்று நான் எதிர்பார்த்தேன்.
நான் சால்வையை அருகில் வைத்துக் கொண்டுதான் இருந்தேன்” எனக் கூறியுள்ளார். “சால்வை குறித்து நினைவூட்டியது நல்லது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நியாயம் கிடைக்கும் வரை தான் கறுப்பு சால்வையை அணிய போவதாக இதற்கு முன்னர் ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
காலம் முழுவதும் தமது குடும்ப பலத்தை கட்டுவதற்கு குரக்கன் சால்வை அணிவது போல் அல்ல, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நியாயம் கிடைக்கும் வரை கறுப்பு சால்வை அணிவேன் என அவர் சபையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan