அடிப்படை அறிவற்ற எம்.பிக்களே 13 ஆவது திருத்தத்துக்கு எதிரிகள்: ஹரின் விளாசல்
அடிப்படை அறிவற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகின்றனர் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க முடியாது. அதை முழுமையாக நடைமுறைப்படுத்தியே தீர வேண்டும்.
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க படிப்படியாக நிறைவேற்றி வருகின்றார்.
அதேபோல் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.
இந்நிலையில், 13 தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து முட்டிமோதுவதை ஆளும் - எதிரணி எம்.பிக்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்." என தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
