யாழ்ப்பாணத்திற்கு வரும் இந்திய பிரபலங்கள்: களைகட்டப்போகும் இசை நிகழ்ச்சி
காலவோட்டத்திற்கு ஏற்ப, அபிவிருத்தி பாதையில் வடக்கு தமிழர் பகுதி வெகு விரைவாக முன்னகர்ந்து வருகின்றது.
இவற்றுள், புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு என்பது அளப்பறியதாக காணப்படுவதுடன், வடக்கில் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்தநிலையில், இலங்கை SLIIT நிறுவனத்துடன் கைகோர்த்து Northern Uni வடக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
பிரதான ஊடக அனுசரணை
Northern Uni உரிமையாளரான புலம்பெயர் தமிழர் இந்திரன் அவர்களின் விடாமுயற்சியால் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், சமீப காலங்களில் வடக்கின் கலை, கலாசார, பொழுதுபோக்கு அம்சங்களையும் அவர்கள் முன்னிலைப்படுத்துகின்றனர்.
அந்தவகையில் NORTHERN UNI இன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெறவுள்ளது.
ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடகத்தின் பிரதான அனுசரணையுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில், கனடாவில் வசிக்கும் நடிகை ரம்பா இந்திரன் உள்ளிட்ட பல தென்னிந்திய திரைப் பிரபலங்கள் பங்குபற்ற உள்ளனர். மேலும், இந்த நிகச்சியில் பல ஈழத்து கலைஞர்களுக்கும் பங்கு கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
இதற்கு, லங்காசிறி, ஐபிசி தமிழ் ஊடகம் பிரதான ஊடக அனுசரணையை வழங்குகிறது.
இவ்வாறான செயற்திட்டத்தால் பல்வேறு துறைகளிலும் செயட்திறன்மிக்க சமுதாயத்தை உருவாக்குவதே northern Uni உரிமையாளரான புலம் பெயர் தமிழர் இந்திரன் அவர்களின் பிரதான இலக்காக காணப்படுகின்றது.