மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டின் மகிழ்ச்சி என்றும் தொடரட்டும்: தமிழ்வின் வாசகர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
மலர்ந்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டானது அனைவருக்கும் சிறப்பானதாக அமைய தமிழ்வின் குழுமம் தமது வாசகர்களுக்கு உளங்கனிந்த சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
சித்திரை புத்தாண்டு 'குரோதி' வருடமானது இன்று 13.04.2024 சனிக்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கவுலவக்கரணம், துலாம் லக்னம், மிதுன நவாம்சம், சனி காலவோரை, தாமதகுணவேளையைச் சேர்ந்த முன்னிரவு 8.15 மணிக்கு பிறக்கிறது.
இன்று தமிழ் புதிய ஆண்டான 'குரோதி' வருடத்தில் தமிழ்வின் இணையத்தள வாசகர்கள் அனைவரும் சகல செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிறந்திருக்கும் ஆண்டு அனைவரும் நோய்நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இலங்கை முழுவதும் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சமய சம்பிரதாயங்களை உள்ளடக்கி நடைபெறும் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களின் பாரம்பரிய நிகழ்வுகள், கொண்டாட்டங்களில் அடையும் இன்பமும் களிப்பும் வாழ்நாள் முழுதும் தொடர வாழ்த்துகிறோம்.
மீண்டும் எமது அனைத்து வாசகர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் தமிழ்வின் இணைய குழுமம் பெருமை கொள்கின்றது.
வாழ்த்துக்கள்!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |