இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி
இலங்கையில் சகல கிராம சேவையாளர் பிரிவுகளிலும் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட 40 குடும்பங்களுக்கு 2,000 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்வதற்கான இலத்திரனியல் அட்டையொன்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பெண் தொழில் முனைவோரினால் நடத்தி செல்லப்படும் சிறிய சிறப்பு அங்காடிகளில், குறித்த இலத்திரனியல் அட்டையின் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பெண் தொழில் முனைவோரினது சிறப்பு அங்காடி வலையமைப்பொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், தற்போது பொருட்களின் விலை, நாட்டில் பொருளாதார நிலை என்பவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும் போது அரசாங்கத்தின் குறித்த தீர்மானமானது குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவலாகும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
