பிரித்தானியா செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்
வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியா வரும் பயணிகளுக்கான கொரோனா வைரஸ் பரிசோதனையை அரசாங்கம் இரத்து செய்துள்ளது.
முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்காக இந்த சலுகைகயை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகள், பிரித்தானியா வந்த பிறகு Lateral Flow எனப்படும் என்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என குறிப்பிடப்படுகின்றது.
பிரித்தானியா வரும் பயணிகள் இந்த Lateral Flow பரிசோதனைக்காக பயணிகள் 20 பவுண்ட் செலவிட வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரித்தானியா வரும் தடுப்பூசி போடாத பயணிகளுக்கான தனிமைப்படுத்தலையும் அரசாங்கம் இரத்து செய்துள்ளது. தடுப்பூசி போடாத பயணிகள், இனி பிரித்தானியா வந்த பிறகு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் அறிவித்தள்ளது.
ஆனால், தடுப்பூசி போடாமல் பிரித்தானியா வரும் பயணிகள் கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
அதேவேளை, விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியர்கள், அவர்கள் செல்லும் இடத்தில் அமுலில் இருக்கும் கொரோனா வைரஸ் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.