இலங்கை இணையத்தள வசதி குறித்து மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
பிரபல SpaceX நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணையப் பிரிவான Starlink ஊடாக இலங்கைக்கான இணைய அணுகலைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது.
இலங்கையில் Starlink இணையச் சேவைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக SpaceX நிறுவனத்துடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் இலங்கையில் இணைய சேவைகளை ஆரம்பிப்பதற்கான ஒழுங்குமுறை அம்சங்கள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பில் முதல் சுற்று கலந்துரையாடலில் கவனம் செலுத்தியதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் எலன் மஸ்க்கின் ரொக்கட் நிறுவனமான SpaceX இன் செயற்கைக்கோள் இணையப் பிரிவான StarLink, நவம்பர் மாதம் முதலாம் திகதி இந்தியாவில் தனது வணிகத்தைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
