கிண்ணியாவில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு ஒதுக்கீட்டின் கீழ் பொருட்கள் விநியோகம்
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபைக்கான பொருட்கள் விநியோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (09) கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
காணி அனுமதி
இந்த நிகழ்வில் திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லாவின் 2024ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.
இதன்போது கிண்ணியா பிரதேச செயலாளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிண்ணியா பிரதேச செயலக கணக்காளர், கிண்ணியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், பாடசாலை அதிபர்கள், நகர சபை, பிரதேச சபை செயலாளர் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது காணிக்கான ஆவணங்களுக்கு விண்ணப்பித்து காணிக்கச்சேரிகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காணி அனுமதி பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.