சட்டவிரோத முறையில் மண் அகழ்வில் ஈடுப்பட்டவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள் (Photos)
செங்கலடி தளவாய் பகுதியில் இரவு வேளைகளில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கிராம மக்கள் இணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்திரன் (V.Surendran) தெரிவித்துள்ளார்.
தளவாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தோணாக்கள் கொண்ட பகுதியில் பாரிய மணல் கொள்ளை நடைபெற்றது.
இதன் போது மணல் அகழ்வில் ஈடுப்பட்ட டிப்பர் மற்றும் கனரக வாகனங்களை பிடித்து மேலதிக நடவடிக்கைக்காக நீதிமன்றம் கொண்டு செல்லப்படவுள்ளது.
குறித்த தளவாய் பிரதேசமானது அண்மைக்காலமாக தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு, அரச காணி திருட்டு இனரீதியாக பல இன்னல்களை கொண்டுள்ளனர்.
சட்டவிரோதமான பிரச்சனைகளால் இக்கிராம மக்கள் அரசாங்கத்தினதும் அரச ஊழியர்களின் செயற்பாடுகளை கண்டு அதிருப்தி அடைந்துள்ளனர்.
குறித்த பகுதிகளை அரசாங்க அதிபர் விசேட குழு கொண்டு அவதானிக்கும் பட்சத்தில் இப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது என செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |



கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam