கிளிநொச்சியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக வழங்கப்பட்ட இரண்டு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட இரண்டு வீடுகளை, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் பயனாளிகளிடம் நேற்றையதினம் கையளித்துள்ளார்.
வட்டக்கச்சி சிவிக் சென்றர் மற்றும் மாயவனூர் பகுதிகளிலேயே இந்த வீடுகளை அவர் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார்.
இந்த நிகழ்வுகளில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோடீஸ்வரன் றுஷாங்கன், கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன், வீடமைப்பு அதிகார சபை கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர் தங்கத்துரை சுபாஸ்கரன், அந்தந்த பகுதி கிராம சேவையாளர்கள் மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
சிவிக் சென்றர் பகுதியில் நடராஜா திருச்செல்வன் என்பவரும், மாயவனூர் பகுதியில் கோமகன் அகல்வாணி என்ற பயனாளியும் நேற்றையதினம் தமது வீடுகளைப்பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
வீடுகளைக் கையளித்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் வை.தவநாதன் மற்றும் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோர், வீடுகளுக்கான மின்சார இணைப்பு மற்றும் பயனாளிகளின் இதர தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.


போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam