அம்பாறை விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினிடம் சடலம் ஒப்படைப்பு
அம்பாறையில் பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் சிற்றூர்தி (வான்) மோதி உயிரிழந்த சிறுவனின் சடலம் குடும்பத்தினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (29.02.2024) விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பில் தெரியவருவகையில்,
அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீட்டின் கதவு தற்செயலாக திறந்த நிலையில் வீதியை நோக்கி ஓடிய வேளை, பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் சிற்றூர்தி மோதியதில் நேற்றுசிறுவன் படுகாயமடைந்தான்.
பிரதேசவாசிகள்
இந்நிலையில் படுகாயமடைந்த சிறுவன் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பெரிய நீலாவணை விஷ்ணு வித்தியாலய வீதியை சேர்ந்த 4 வயது மதிக்கத்தக்க அருணா ஹர்ஷான் என்பதுடன் விபத்தின் போது சிறுவனின் சகோதரியை ஏற்ற வந்த சிற்றூர்தி சிறுவனை மோதியதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கலமுனை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam