கந்தளாயில் கைக்குண்டு மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை
கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், ஒரு பழைய கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்று யானை வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், நேற்று(10.01.2026) பிற்பகல் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
பரவிபாஞ்சான் குளத்திற்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ள குறித்த நிலத்தில் குழிகள் தோண்டிய போது, மண்ணுக்குள் புதைந்திருந்த ஒரு பழைய கைக்குண்டு வெளியில் தென்பட்டுள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
இதனையடுத்து, யானை வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர், கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த பகுதியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விபரங்களை இன்று(11.01.2026) கந்தளாய் நீதவான் நீதிமன்றில் அறிக்கையிட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 7 நிமிடங்கள் முன்
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam