முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க காலமானார்
இலங்கை இராணுவத்தின் 11வது தளபதியாகப் பணியாற்றிய ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க இன்று (13) அதிகாலை தனது 90 வயதில் காலமானார்.
கடந்த சில நாட்களாக கொழும்பு யுத்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1988 முதல் 1991 வரை இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த ஜெனரல் வனசிங்க, 1995ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பின்னரும், தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய பொறுப்புகளை ஏற்று பணியாற்றியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை ஹமில்டன் வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய ஸ்நைப்பர் (Sniper) படையை இராணுவத்தில் அறிமுகப்படுத்தியது ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராக இருந்த வனசிங்கவின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
