சீனாவுடனான அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் சரியான நேரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை - அரசாங்கம் அறிவிப்பு
சீனாவுடன் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் சரியான நேரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
முன்னாள் அரசாங்கத்துக்கும் சீனாவிற்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தம் துறைமுகத்தின் குத்தகையை 198 ஆண்டுகளாக நீடிக்க அனுமதிப்பதாக பண, மூலதன சந்தைகள் மற்றும் நிறுவன சீர்திருத்த ராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கொழும்பு தெரிவித்தார்.
குத்தகை ஆரம்பத்தில் 99 ஆண்டுகளுக்கு இருந்தது, இது பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தில் அது 198ஆக நீடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சீன அரசாங்கத்துடன் இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய கோரும் பேச்சுவார்த்தையை அரசாங்கம் ஆரம்பிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகையை 198 ஆண்டுகளாக நீடிக்க
அனுமதிக்கும் சீனாவுடன் முன்னாள் அரசாங்கம் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்று
முன்னாள் ராஜாங்க நிதியமைச்சர் எரான் விக்ரமரத்ன வலியுறுத்தினார்.
எனவே இது தொடர்பில் விசாரணை அவசியம் என இரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.