போர் நிறுத்தத்துக்கு தயாராகும் இஸ்ரேல்-ஹமாஸ்
கட்டார் - தோஹாவில் இடம்பெறும், பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் போது, ஹமாஸ் அமைப்பினர் 33 பணயக்கைதிகளை விடுவிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஹமாஸ_க்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்படக்கூடும் என்பதற்கான முதல் சிறப்பு சமிஞ்சையாக கருதப்படுகிறது.
ஹமாஸும் அதன் நெருங்கிய அமைப்புக்களும், இஸ்ரேலில் இருந்து பிடிக்கப்பட்ட 251 பணயக்கைதிகளில் 94 பேரை இன்னும் ஹமாஸ் தமது பிடியில் வைத்துள்ளது என்றும் இஸ்ரேல் நம்புகிறது.
இஸ்ரேலிய அரசாங்கம்
அதேநேரம் ஏனையவர்களில் குறைந்தது 34 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேலிய அரசாங்கம் சந்தேகிக்கிறது.
ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் விடுவிக்கப்படும் 33 பணயக்கைதிகளில் பெரும்பாலோர் உயிருடன் இருப்பதாகவே இஸ்ரேல் நம்புவதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இறந்த கைதிகளின் உடல்களும் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு தரப்புக்கும் இடையிலான போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் 42 நாட்கள் நீடிக்கும். அமெரிக்காவும் இந்த போர் நிறுத்தத்துக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்த திட்டம்
இதேவேளை போர் நிறுத்த திட்டங்களின் முதல் கட்டத்தின் போது எகிப்து-காசா எல்லையில் உள்ள ஒரு குறுகிய நிலப்பரப்பான பிலடெல்பி வழித்தடத்தில் இஸ்ரேலியப் படைகள் ஒரு இருப்பைப் பராமரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஒக்டோபர் 7 ஆம் திகதியன்று, ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலின்போது, இஸ்ரேலின் 251 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்
அதில் பெரும்பாலோர் கடந்த ஆண்டு இறுதியில் ஹமாஸ{டன் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் ஹமாஸ்- இஸ்ரேல் போரில் கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள்,இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |