போர் நிறுத்த விவகாரம்: எகிப்துக்கு விரையும் ஹமாஸ் தூதுக்குழு
காசா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் பாலஸ்தீன கைதிகளுக்காக சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தம் தொடர்பில் விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் ஆராய எகிப்துக்கு தூதுக்குழு ஒன்றை அனுப்ப ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
கெய்ரோவுக்கு ஒரு தூதுக்குழு
''எகிப்தின் - கெய்ரோவுக்கு ஒரு தூதுக்குழு அனுப்பப்பட்டாலும் ஹமாஸ் இந்த சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்காது.
காசா போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளின் தற்போதைய சுற்று முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்க மூத்த எகிப்திய உளவுத்துறை அதிகாரிகளை பிரதிநிதிகள் சந்திப்பார்கள்.
கடந்த வாரம் கட்டாரில் ஆரம்பமான சுற்று பேச்சுவார்த்தைகள் பங்கேற்க மாட்டோம் என்று ஹமாஸ் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறது.
ஹமாஸ் தூதுக்குழுவின் எதிர்பார்க்கப்படும் வருகை, நீண்டகாலமாக நிறுத்தப்பட்டிருந்த போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் என்று அமெரிக்கா கூறியதற்கு பதிலாக இந்த கருத்துக்கள் அமையும் என்பதே எங்களது கருத்து" என்றார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா





இயக்குநர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாள்.. அவருடைய அடுத்த படம் மற்றும் அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam

முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam
