இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இலங்கையர் பாதிப்பு
தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இதனை உறுதி செய்துள்ளார்.
இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாக தூதுவர் குறிப்பிட்டார்.
பிள்ளையான் - வியாழேந்திரன் எமக்கு உதவி செய்கின்றனர்: சாணக்கியனே எதிரி: அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் எச்சரிக்கை(Video)
ஹமாஸ் தாக்குதல்
தெற்கு இஸ்ரேலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த கெக்கிராவைச் சேர்ந்த சுஜித் பிரியங்கர என்ற இலங்கையரே காயமடைந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மேலும் இலங்கையர்கள் உள்ளார்களா என்பது தொடர்பிர் ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.