போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட ஹமாஸ்: கேள்விக்குறியாகியுள்ள இஸ்ரேலின் நிலை
போர் நிறுத்தம் குறித்த ஐநா பாதுகாப்பு அமைச்சரவையின் தீர்மானத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐநா பாதுகாப்பு அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்ததை அடுத்து பணயக்கைதிகளின் பரிமாற்றம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்த ஹமாஸ் - இஸ்ரேல் மோதலின் எதிரொலியானது தற்போது உலகில் வலுக்க ஆரம்பித்துள்ளது.
போர்நிறுத்த தீர்மானம்
உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்றும் 75 சதவீதமானோர் குழந்தைகள் எனவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த ஆரம்பித்தன.
காசா யுத்தத்தில் இஸ்ரேல் சார்பு நாடான அமெரிக்காவும் தற்போது போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறது. இந்நிலையில் ஐநா பாதுகாப்பு அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து ஹமாஸ் மூத்த அதிகாரி சமி அபு ஸுஹ்ரி கூறுகையில், "போர்நிறுத்தம், பணயக்கைதிகளை திரும்ப ஒப்படைத்தல் போன்றவற்றை செய்ய தயாராக இருக்கிறோம். போர் நிறுத்தம் என்பது அமெரிக்காவுக்கு உண்மையான சோதனையாகும்.
அவர்கள் போர் நிறுத்தத்திற்கு நிஜமாகவே தயாராக இருக்கிறார்களா? என்பது இப்போது தெரிந்துவிடும்" என்று கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க... போட்டோ இதோ Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri