காசா குறித்த ட்ரம்பின் அறிவிப்பு.. இந்திய - பாகிஸ்தானின் ஒருமித்த நிலைப்பாடு

Donald Trump Israel-Hamas War
By Sajithra Oct 04, 2025 07:24 AM GMT
Sajithra

Sajithra

in உலகம்
Report

புதிய இணைப்பு 

காசாவில் மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது உட்பட, தனது அமைதித் திட்டத்தின் சில கூறுகளை ஹமாஸ் ஏற்றுக்கொண்ட பிறகு, நீடித்த அமைதிக்கு ஹமாஸ் தயாராக இருப்பதாக தான் நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்நிலையில், காசாவில் அமைதியை முன்னேற்றுவதில் ட்ரம்பின் பங்களிப்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

அதேவேளை, காசாவில் போர் தொடங்கியதிலிருந்து போர்நிறுத்தத்தை நோக்கிய மிக நெருக்கமான நடவடிக்கை இது என்று பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது. 

அமைதிக்கான வாய்ப்பு மீண்டும் மூடப்பட அனுமதிக்கப்படக்கூடாது என்றும் பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

முதலாம் இணைப்பு 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, காசா பகுதிக்கான அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின் முதல் படிகளை ஏற்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

அதன்படி, காசா பகுதியில் குண்டுவீச்சு நடத்துவதை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டு ட்ரம்பின் அமைதி திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. 

ட்ரம்பின் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய ஹமாஸ்! அமைதிக்கான எதிர்பார்பில் காசா

ட்ரம்பின் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய ஹமாஸ்! அமைதிக்கான எதிர்பார்பில் காசா

ட்ரம்பின் எச்சரிக்கை 

ட்ரம்ப், நேற்று (3) தனது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில், ஹமாஸ் தனது அமைதித் திட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமைக்குள் உடன்பட வேண்டும் என்று எச்சரித்திருந்தார். 

காசா குறித்த ட்ரம்பின் அறிவிப்பு.. இந்திய - பாகிஸ்தானின் ஒருமித்த நிலைப்பாடு | Hamas Accepts Trump Ultimatum Last Warning Trump

ட்ரம்பின் இந்தத் திட்டம் உடனடியாக சண்டையை நிறுத்துதல், ஹமாஸால் பிடிக்கப்பட்ட 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் இறந்ததாகக் கருதப்படும் பணயக்கைதிகளின் உடல்களை 72 மணி நேரத்திற்குள் ஒப்படைத்தல் ஆகியவற்றை முன்மொழிந்தது.

அதற்குப் பதிலாக, இஸ்ரேல் வைத்திருந்த நூற்றுக்கணக்கான காசாவாசிகள் பரிமாறிக்கொள்ளப்படவிருந்தனர்.

ஒன்ராறியோவில் இளைஞர் நல மையத்தை திறந்து வைத்த இணை அமைச்சர் விஜய் தணிகாசலம்

ஒன்ராறியோவில் இளைஞர் நல மையத்தை திறந்து வைத்த இணை அமைச்சர் விஜய் தணிகாசலம்

வலுவான நடவடிக்கைகள்  

அந்த உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால், ஹமாஸுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் மேலும் கூறியிருந்தார்.

காசா குறித்த ட்ரம்பின் அறிவிப்பு.. இந்திய - பாகிஸ்தானின் ஒருமித்த நிலைப்பாடு | Hamas Accepts Trump Ultimatum Last Warning Trump

அதன்படி, கிட்டத்தட்ட 2 வருட போரை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒக்டோபர் 7, 2023 அன்று நடந்த தாக்குதலில் பிடிபட்ட மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்ப ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும், ட்ரம்பின் அமைதித் திட்டத்தில் ஹமாஸை ஆயுதக் களைதல் மற்றும் காசாவிலிருந்து வெளியேறுதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து ஹமாஸ் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சிக்கிய இராணுவ மேஜர் - ஜனாதிபதியை குறிவைக்கும் ஸ்னைப்பர் துப்பாக்கி! உடைக்கப்படும் இரகசியம்

சிக்கிய இராணுவ மேஜர் - ஜனாதிபதியை குறிவைக்கும் ஸ்னைப்பர் துப்பாக்கி! உடைக்கப்படும் இரகசியம்

இறைச்சி விற்பனை நிலைய சோதனையின் போது கோபமுற்ற தவிசாளர்

இறைச்சி விற்பனை நிலைய சோதனையின் போது கோபமுற்ற தவிசாளர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US