நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை (Photos)
முஸ்லிம்களின் தியாகத் திருநாளான புனித ஹஜ் பெருநாள் நாடு பூராகவும்
கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில்  இன்று (29.06.2023) புத்தளம் - கருத்தரவை மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை இடம்பெற்றுள்ளது.
பெருநாள் தொழுகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புத்தாடைகளை உடுத்தி, நறுமணம் பூசி கலந்து கொண்டிருந்தனர்.
புத்தளம் ஹஜ்ப் பெருநாள்

பெருநாள் தொழுகை இமாம் மின்ஹாஜ் தொழுவிக்கப்பட்டது. இதன்போது மக்கள் ஒருவருக்கொருவர் தமது மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் பொலிஸாரினால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஹட்டனில் ஹஜ் பெருநாள் தொழுகை
இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் ஹஜ் பெருநாள் தொழுகை ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலில் மௌலவி சாஜகான் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதில் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமியப் பக்தர்கள் மிகவும் சமயத்திற்கு மதிப்பளித்து மிகவும் உணர்வுப்பூர்வமாகத் தொழுகையில் ஈட்டுப்பட்டுள்ளனர்.
இதில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சாந்தி சமாதானம் சுகவாழ்வு வேண்டியும் நாடு வளம்பெற வேண்டியும் துவா பிரார்த்தனையும் இடம்பெற்றுள்ளது.
பெருநாள் தொழுகையினை தொடர்ந்து ஒருவருக்குக் கட்டித்தழுவி பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.
மேலதிக செய்தி - மலைவாஞ்சன்
வவுனியாவில் ஹஜ்ஜிப் பெருநாள் தொழுகை
வவுனியா தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை பட்டாணிச்சூர் 5ஆம் ஒழுங்கை குடா வயல் திடலில் இன்று (29.06.2023) காலை இடம்பெற்றது.
முஸ்லிம்களின் தியாகத் திருநாளான புனித ஹஜ் பெருநாள் நாடு பூராகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

புனித ஹஜ்ஜிப் பெருநாள்
அதனடிப்படையில் வவுனியாவிலும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் விசேட தொழுகைகளுடன் கொண்டாட்டம் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில், வவுனியா தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை ஜமாத்தின் தலைவர் அஷ்ஷேய்க் ஸாதிகீன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பலரும் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டதுடன் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
மேலதிக செய்தி - திலீபன்
மன்னாரில் ஹஜ் பெருநாள் தொழுகை
மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் (29.06.2023) ஹஜ் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றுள்ளது.
இந்த தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது ஹஜ் பெருநாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் விசேடமாகத் துவா தொழுகைகள் இடம் பெற்றது.
மேலும் மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி - ஆஷிக்
அம்பாறை ஹஜ் பெருநாள் தொழுகை
புனித ஹஜ் பெருநாள் தொழுகை அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று (29.06.2023) வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.
இதன் போது கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை, கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து தமது பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளும் முகமாக உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்குச் சென்று பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், உணவு பண்டங்களைப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி - பாரூக் சிஹான்
ஏறாவூரில் ஹஜ் பெருநாள் தொழுகை
ஏறாவூரில் புனித ஹஜ் பெருநாள் இன்று (29.06.2023) கொண்டாடப்பட்டுள்ளது.
அல் மர்க்கஸூல் இஸ்லாமி அமைப்பினர் ஏற்பாட்டில் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் இந்த தொழுகை இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் தொழுகையும் அதன் பின்னர் சன்மார்க்கப் பிரசாரமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி - ருசாத்








 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        