இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி
முஸ்லிம் சகோதரர்களும் இந்நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றி இன்பமுடனும், நலமாகவும் வாழ வாழ்த்துவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம் சகோதரர்கள் அல்லாஹ்வின் அருளினால் தியாக பெருநாளாம் ஹஜ் பெருநாளை இன்று மகிழ்ச்சியுடனும் உவகையுடனும் கொண்டாடுகின்றனர்.
'ஈதுல் அழ்ஹா' எனப்படும் தியாகப் பெருநாள் இறைவனுக்காக மனிதன் செய்த மிகப்பெரிய தியாகத்தை நினைவுபடுத்திக் கொண்டாடுவதாகும். இஸ்லாத்தின் ஐந்தாவது கடமை "ஹஜ்" கடமையாகும்.
அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் இந்நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றி இன்பமுடனும், நலமாகவும் வாழ வாழ்த்துகின்றேன்.
மேலும் இன்றைய காலகட்டத்தில் நாட்டில் நிலவும் கோவிட் வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினர் கூறும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்நாளில் நாம் அனைவரும் சாந்தி, சமாதானம், சமத்துவத்துடனும் வாழ முஸ்லிம் சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam