பா.ஜ.கவின் முக்கியஸ்தர் எச்.ராஜாவுக்கு சிறை தண்டனை
பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பை சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்றையதினம் (02.12.2024) வழங்கியுள்ளது.
2018ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என எச்.ராஜா கருத்து வெளியிட்டதோடு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு எச்.ராஜா மனு மூலம் கோரியிருந்தார்.
மேன்முறையீடு
எனினும், மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் குறித்த வழக்கின் விசாரணையை முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எச். ராஜா குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு 6 மாதகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், எச்.ராஜாவுக்கு மேன்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளதால் அவர் உடனடியாக சிறைக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |