ஜப்பானின் முன்னாள் பிரதமரை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தை வெளிட்ட துப்பாக்கிதாரி
ஜப்பானின் முன்னாள் பிரதம மந்திரி ஷின்சோ அபேயின் படுகொலையை விசாரிக்கும் பொலிஸார், துப்பாக்கிதாரி ஒரு "குறிப்பிட்ட அமைப்பு" மீது வெறுப்பு கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
41 வயதான டெட்சுயா யமகாமி என பெயரை கொண்ட துப்பாக்கிதாரி, தாம் வெறுப்பு கொண்டுள்ள குழுவின் ஒரு உறுப்பினரே அபே என தெரிவித்துள்ளார்.
அந்த காரணத்திற்காக அவரை சுட்டுக் கொன்றார் என பொலிஸார் தெரிவித்ததுடன், அந்த குழுவின் பெயரை பொலிஸார் குறிப்பிடவில்லை.
| துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம் |
உள்ளூர் துப்பாக்கி

அரசியல் பிரசார நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அபே நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால், தாம் சுட்டதை, துப்பாக்கிதாரி ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரசாரத்தின் போது சுடப்பட்டார்

அபே ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் மற்றும் 67 வயதில் அவரது மரணம் துப்பாக்கிச் சூட்டினால் அமைந்தது அந்த நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் மேல்சபை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவரது முன்னாள் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு (எல்டிபி) பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அவர் சுடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri