அமெரிக்காவில் நத்தார் பேரணியின் மீது வாகனம் மோதச் செய்து தாக்குதல்
அமெரிக்காவில் நத்தார் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வாகனமொன்றை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 20இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் விஸகொன்சினின், வ்வுகோஷாவில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் மக்கள் மீது மோதியதாக கூறப்படும் வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ள அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
எவ்வாறெனினும், இந்த சந்தேகநபர் பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
9 முதல் 15 வயது வரையிலான சிறுமிகள் நடனமாடிக் கொண்டிருந்தனர் எனவும் அவர்கள் மீது வாகனம் மோதியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியள்ளன.



சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri