தென்னிலங்கையில் வீட்டுக்குள் புகுந்து தந்தை, மகள் மீது துப்பாக்கி சூடு
காலியில் வீடொன்றுக்குள் புகுந்து பெண் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிட்டியாகொட - பலிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றினுள் இருந்த நபர் மற்றும் பெண்ணொருவர் மீது நேற்று இரவு ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்தவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மர்ம கும்பல்
49 மற்றும் 29 வயதுடைய மிட்டியகொட, பாலிமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் தந்தையும் மகளும் காயமடைந்துள்ளனர்.
தந்தையும் மகளும் வீட்டில் இருந்தபோது, மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த ஆணும் பெண்ணும் பலபிட்டிய வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிட்டியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.