கொழும்பில் பிரபல வர்த்தகர் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு
இலங்கையின் பிரபல வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் மீது இன்று (22.06.2023) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த வர்த்தகர் வீட்டின் மீது T56 ரக துப்பாக்கியிலிருந்து பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் வர்த்தகர் குடியிருக்காத நிலையில், அவரது தொழிற்சாலையில் நிர்வாக பணிப்பாளராக பணியாற்றும் வணிக நிறுவன உரிமையாளரின் மகன் வசித்துவருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அச்சுறுத்தும் நோக்கில் துப்பாக்கிச்சூடு
இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் 5.45 மணி வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தனிப்பட்ட பிரச்சினையின் அடிப்படையில் அச்சுறுத்தும் நோக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |