கொழும்பு புறநகர் பகுதியில் துப்பாக்கி முனையில் கொள்ளை? வெளியான காணொளி
கொழும்பு புறநகர் பகுதியான வத்தளையில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை முயற்சி தொடர்பான சி.சி.டி.வி காணொளி வெளியாகியுள்ளது.
கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி முனையில் காசாளரை அச்சுறுத்துவதை சி.சி.டி.வி காட்சிகள் காட்டுகின்றன.
இதனிடையே, அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த பல்பொருள் அங்காடி நிர்வாகம், கடந்த வாரம் நடந்த கொள்ளை முயற்சியில் அதன் ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை நிலையத்தில் அதன் உறுப்பினர்கள் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கை காரணமாக பல்பொருள் அங்காடியில் எந்த சேதமும் ஏற்படவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விற்பனை நிலையம் தற்போது செயல்பட்டு வருகிறது, இது தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri