இலங்கை துப்பாக்கிகளுக்கு உலகம் முழுவதும் அதிக கேள்வி! ஒரு கள ஆய்வு
கொழும்பின் புறநகரான கடவத்தை பகுதியில் 1957ஆம் ஆண்டு முதல் அரச அனுமதியுடன் இயங்கி வரும் துப்பாக்கிகள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடர்பான தொகுப்பினை லங்காசிறியின் தேடலில் பார்க்கவுள்ளோம்.
இது தொடர்பில் எமது லங்காசிறி குழு குறித்த நிறுவத்தினை கள ஆய்வு செய்திருந்ததுடன், அங்கு மேற்கொள்ளப்படும் உற்பத்திகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்திருந்தது.
இந்த நிலையில் நிறுவனத்தின் பிரதானி இலங்கையில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் தொடர்பான பல சுவாரசியமான விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 90 வீதமான துப்பாக்கிகள் இலங்கையில் தயாரிக்கப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் குறித்த துப்பாக்கிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட போதும் தற்போது இலங்கையிலேயே தயாரிக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
துப்பாக்கிகள் மாத்திரமின்றி அவற்றிற்கான பாகங்களும் இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய வகையிலான துப்பாக்கிகளும் இலங்கையில் காணப்படுகின்றன. சில துப்பாக்கிகளுக்கு உலகம் முழுவதும் அதிக கேள்வி உள்ளது.
எனினும் இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் தொடர்ச்சியாக பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதும், பாதுகாப்பு காரணங்கள் காரணமாக அவற்றுக்கான முடிவு எட்டப்படாத நிலை தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.