பிரித்தானியாவில் கொலை குற்றச்சாட்டில் கைதான இலங்கையருக்கு மரண தண்டனை
பிரித்தானியாவில் பொலிஸ் அலுவலர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த பிரித்தானியர் ஒருவருக்கு சாகும் வரையிலான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி,
‘‘இலங்கையைச் சேர்ந்த லூயிஸ் டி சொய்ஸா என்பவர், பிரித்தானியா பொலிஸ் அலுவலரான சார்ஜன்ட் மாட் ரதனா என்பவரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
54 வயதான குறித்த பொலிஸ் அலுவலர், சொய்ஸாவை கைது செய்ய தயாரானபோதே, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
விசாரணை
2020 செப்டம்பர் 25ஆம் திகதியன்று சொய்ஸாவை வீதியில் வைத்து தடுத்த, பொலிஸ் அதிகாரிகள் வெடிமருந்துகளையும் கஞ்சாவையும் அவரிடம் இருந்து கண்டெடுத்துள்ளனர்.
எனினும் அவரின் கைக்குக் கீழே மறைத்து வைத்திருந்த ஆறு தோட்டாக்கள் அடங்கிய துப்பாக்கியை பொலிஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் சொய்ஸாவின் கைகளில் விலங்கிடப்பட்டிருந்த போதும்,
தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த அவரது துப்பாக்கியால் பொலிஸ் அதிகாரியை நோக்கி சுட்டார் என்று விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நேற்று(28.07.2023) பிரித்தானியாவின் நோர்தாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில், சொய்ஸாவுக்கான தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
