இலங்கை தமிழ் மாணவன் கின்னஸ் சாதனை
கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் மாணவன் யோகா மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் ரஞ்சன்- ஜெயலட்சுமி தம்பதி. இவர்களின் மகன் திவ்வியேஷ்(16), கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் தனியார் யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம் பெண் க்ருடாஸ் ருசியானாவின் கின்னஸ் சாதனையான டிம்பாசனம் மூலம் பின்புறமாக ஒருநிமிடத்தில் 24 பலூன்களை உடைத்ததை முறியடிப்பதற்காக திவ்வியேஷ் தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.
அந்த பயிற்சியின் விளைவாக, சமீபத்தில் திவ்வியேஷ் டிம்பாசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்தார்.
கின்னஸ் சாதனை படைத்த திவ்வியேஷ் மற்றும் அவருக்கு பயிற்சி அளித்த சந்தியா ஆகியோரை, இலங்கை தமிழர் அகதிகள் முகாம் மக்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
