பாகிஸ்தானில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு குறித்து வழங்கப்பட்ட உத்தரவாதம்
பாகிஸ்தானில் கல்வி பயிலும் இலங்கை மாணவ,மாணவியரின் பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரிற்கான இலங்கை கொன்சோல் ஜெனரல் யாசீன் ஜொய்யா இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
மாணவ,மாணவியர் வழமை போன்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும், பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவ>மாணவியரை நேற்று நேரில் சந்தித்த போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
பிரியந்த குமார படுகொலைச் சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் மாணவர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏதேனும் அவசர நிலைமைகள் ஏற்பட்டால் பிரதேசத்தின் பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் ஆகியோருக்கு உடன் அறிவிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் தொலைபேசி இலக்கங்கள் மாணவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரியந்தவின் சடலத்தை துரித கதியில நாட்டுக்கு கொண்டு வர உதவிய பஞ்சாப் பதில் ஆளுனருக்கு கொன்சோல் ஜெனரல் நன்றி பாராட்டியுள்ளார்.
பிரியந்தவின் குடும்பத்தினருக்கு ஏதேனும் உதவிகளை வழங்குமாறு அவர் பதில் ஆளுனரிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.