கோட்டாபயவின் பணியாளர்கள் தொடர்ந்தும் கடமையில்..! எழுப்பப்பட்டுள்ள கேள்வி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணியாளர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார, ஜனாதிபதி அலுவலகத்தில் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றார் என கூறப்படுகிறது.
ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட திட்டங்களுக்கு பொறுப்பாக சுகீஸ்வர கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபயவின் பணியாளர்கள் குறித்து வெளியான தகவல்
மக்களின் எதிர்ப்பினையடுத்து பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு இவ்வாறு தொடர்ந்தும் சம்பளம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மிரிஹான மற்றும் மலலசேகர மாவத்தை ஆகியனவற்றில் காணப்படும் கோட்டாபயவின் இல்லங்களுக்கு தொடர்ச்சியாக பாதுகாப்பு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எழுப்பப்பட்டுள்ள கேள்வி
கோட்டாபவியன் பிரத்தியேக செயலளார் சுகீஸ்வர, தற்பொழுது விசேட திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வருகின்றார்.
மேலும், நாட்டின் நெருக்கடியான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் இவ்வாறு பணியாளர்களை கடமையில் ஈடுபடுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |