சுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவள்ளுவர் குருபூசை
திருவள்ளுவர் ஆண்டு 2053 கும்பத்திங்கள் 7ம் காரிநாள் (19. 02. 2022 சனிக்கிழமை) சுவிற்சர்லாந்து பேர்ன் நகரில் திருவள்ளுவர் குருவழிபாடு அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் மிகு சிறப்பாக நடைபெற்றது.
நாடு, மொழி, இனம், அறம், சமயம் இவற்றிக்கு அப்பாற்பட்ட பொன் மொழிகள், உலகில் பல இனங்கள் வேட்டை ஆடி உலவிய காலத்தில் தமிழன் அளித்த அறிவு நூல் என இன்றும் சான்று பகர திருவள்ளுவரே காரணமாவார்.
திருவள்ளுவர் பெருமான் தமிழன்னை பெற்றெடுத்த பெருமகனாவார். வள்ளுவரை உலகுக்குக் கொடுத்து தமிழ் வான் புகழை ஈட்டிக் கொண்டது.
இப்பொய் சொல்லாத் தமிழ்ப்புலவன் குருவழிபாட்டுத் திருநாள், தமிழின் பெருமை உள்ளத்தில் ஏற்றி இன்பச் செவிகள் தெய்வத்தமிழில் தளைக்க, நாளும் கருவறையில் தாய்த்தமிழில் வழிபாடு காணும் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரத்தில் மிகு சிறப்புடன் நடைபெற்றது தமிழருளாகும்.
அரசியலை அறிய ஓர் அரசியல்நூலாகவும், வெண்பேரறிவை (ஞானத்தை) அளிக்கும் கருவூலமாகவும், கவிச்சுவைக்கு ஒரு காவியமாகவும், இலக்கியச் சுவையதற்க்கு இலக்கியமாகவும், பேரின்பம் நாடுவோர்க்கு ஒரு பேரின்ப நூலாகவும், இம்மைக்கும் இன்பம் நல்கி மறுமைக்கும் வீடுபேற்றினை அளிக்கும் நூலாகவும் இன்றும் விளங்கும் திருக்குறள் பொதுமறையை படைத்தளித்த பெருமைக்குரிய செந்தமிழன் திருவள்ளுவர் ஆவார் ஆகவே ஞானலிங்கேச்சுரத்தில் இப்பெருமான் வழிபாடு ஆண்டுதோறும் நடைபெறுவதாக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா தனதுரையில் எடுத்துரைத்தார்.
வழமைபோல் பேர்ன் வள்ளுவன் பாடசாலை இவ்விழாவிற்கு நல்கை (உபயம்) ஏற்றிருந்தது. பாடசாலை அதிபர் திரு. பொன்னம்பலம் முருகவேள் வள்ளுவர் புகழை மாணவர்களுக்கும் இலகுவில் புரியும்படி சிறப்புரை ஆற்றினார்.
ஆசிரியர் பொன்னம்பலம் முருகவேள் அவர்கள் தனது நிறைவுரையில் இன்னா செய்தாரை ஒருக்க நன்னயம் செய்யச் சொன்னவர் திருவள்ளுவர், நாம் நன்மைகள் செய்யாவிடினும், தீமைகள் செய்யமால் வாழவேண்டும். அதற்கு அனைத்து தமிழர்கள் வீடுகளிலும் திருக்குறள் இருக்க வேண்டும்.
வீடுகளில் திருக்குறள் வெறும் நூலாக மட்டுமில்லாமல் வாழப்படும் நெறியாகவும் கொள்ளப்படவேண்டும் என உரைத்தார். வள்ளுவர் பாடசாலை ஆசிரியர்கள், இளந்தமிழ் மாணவர்களுடன் தமிழர் பண்பாட்டு உடையில் தோன்றியிருந்தனர்.
வள்ளுவன் பாடசாலை மாணவர்கள் உலகப் பெருங் கவிஞர்;, மாந்தர்கள் இவ்வுலகில் வாழ வழிகாட்டும் பொய்யா மொழிகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அளித்த கொடை திருக்குறளில் இருந்து கடவுள் வாழ்த்தினை ஓதி சிறப்புத் தமிழ்வழிபாடு நடாத்தினர்.
ஞானலிங்கேச்சுரம் எழுந்தருளும் ஞானாம்பிகை உனடயா ஞானலிங்கேச்சுரரிற்கும் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது, திருவள்ளுவர் பெருமான் பொற் திருத்தேரில் எழுந்தருளி திருச்சுற்று வலம்வந்து சிவஞானசித்தர்பீடத்தில் திருக்குறள் ஓதி வலம்வந்தார். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் எனும் திருக்குறள் பொருளாக «உள்ள மலரில் வீற்றிருக்கும் கடவுளின் திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் .
இந்த உலகில் நீடித்து வாழ்வார் எனும் நிறைவுடன் ஞானலிங்கேச்சுரத்தில் தமிழும் சைவமும் மிளிர்ந்து வழிபாடுகள் நிறைந்தது. கனடா தமிழாழி தொலைக்காட்சி, சுவிற்சர்லாந்து பேரன் வள்ளுவன் பாடசாலை, மற்றும் கனடா, அமைப் புகள், தமிழக-, புதுச்சேரி அமைப்புகள் நடத்திய உலக தந்தையர் திருவிழா (உலகதந்தையர் நாளில்) உலக சாதனை நிகழ்வு.
சுவிற்சர்லாந்திலிருந்து பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கும் நிகழ்வும் திருவள்ளுவர் வழிபாட்டின் நிறைவில் மிகு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் திருநிறை. முருகன் சுபாஸ்கரன் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
குழந்தைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. அறுசுவை அருளமுது படைத்து, மகேச்சுர வழிபாட்டுடன் வள்ளுவர் பெருமான் குரு வழிபாடு நிறைவுற்றது.
















இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் 10 நிமிடங்கள் முன்

நாட்டின் ஜனாதிபதி புடினையே முதுகில் குத்திய ரஷ்யா! உக்ரைன் போரில் திருப்புமுனை உறுதி... முக்கிய தகவல் News Lankasri

சனி வக்ர பெயர்ச்சியால் அடுத்த18 நாட்களில் இந்த 3 ராசிக்கும் வரப்போகும் போராபத்து....சனியால் அழிவு நிச்சயம்! Manithan

4 நாளிலும் செம வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா? Cineulagam

பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ Cineulagam

முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு போட்ட இமான்! குழந்தைகள் பாஸ்போர்ட் சர்ச்சை பற்றி அதிர்ச்சி தகவல் Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022