பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி பணி ஆரம்பம்: அமைச்சர்கள் குழு ஆய்வு!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இன்று(19.02.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி பணி ஆரம்பம்
இதனை ஆய்வு நடவடிக்கையின் முதற்கட்டமாக, பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சின் பிற தலைவர்கள் உள்ளிட்டோர் விஜயம் செய்துள்ளனர்.
இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அபிவிருத்தியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்திற்கு விமானத் துறை சார்ந்த பணியாளர்களை வடக்கில் இருந்து அதிகளவாக நியமித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்காக விமானத்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து ஆளுநர் செயலகத்தில் கூட்டம் ஒன்றினையும் நடாத்தி இருந்தனர்.
ஜூன் மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்
அதன் பின்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தையும் பார்வையிட்டனர்.

பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு மற்றும் வசதிகள் போதாமல் உள்ளமை தொடர்பாக அந்த இடங்களை பார்வையிட்டு, அபிவிருத்திகளை விரைவுபடுத்தல் போன்றன பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
சர்வதேச விமான நிலையமாக இருக்கின்ற பலாலி விமான நிலையத்தில் தற்போது அடிப்படை வசதிகள் குறைவாக காணப்படுகின்றன. அதனை நிவர்த்தி செய்வதற்கு இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஒரு அபிவிருத்தி ஏற்கனவே ஆரம்பித்த நிலையில், மற்றைய அபிவிருத்தி எதிர்வரும் ஜூன் மாதம் அளவில் ஆரம்பித்து, இந்த விமான நிலையம் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு விமான நிலையமாக மாற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காங்கேசன்துறை துறைமுகத்தை இந்திய அரசின் நிதியுதவியில் அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் வெகு விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் தீபன்








இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam
இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள் News Lankasri