பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் முழுமைத் திட்டத்தை தயாரிக்க அறிவுறுத்தல்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவை, தொழில் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, இரண்டு வாரங்களுக்குள் திறமையான மற்றும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வெளிநாட்டிற்கு அனுப்பும் வகையில், முழுமைத் திட்டத்தை தயாரிக்குமாறு நாடாளுமன்ற பொதுக் கணக்குகளுக்கான குழு அறிவுறுத்தியுள்ளது.
உலகளாவிய தொழில் சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக சம்பளம் பெறும் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பை இலங்கை கைப்பற்றத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து கோபா குழுவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திறமையான இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் ஆற்ற வேண்டிய பங்கை மதிப்பிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தலைமையில் கடந்த வாரம் கூடிய கோபா குழு நாடாளுமன்றத்தில் கூடியுள்ளது.
புதிய திட்டத்துடன் திறமையான திட்டத்தை செயற்படுத்தல்
வெளிநாட்டு வேலைகளுக்கு திறமையான பணியாளர்களுக்கு அதிக தேவை இருந்த போதிலும், தேவைக்கு ஏற்றவாறு பயிற்சி பெற்ற பணியாளர்களை அனுப்ப முடியாதது மிகவும் கவலைக்குரியது என ஹாசிம் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் பணியகம் ஆகியவை உலகின் புதிய தொழில் சந்தைகளில் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க புதிய திட்டத்துடன் திறமையான திட்டத்தை செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை கோபா வலியுறுத்தியது.
இலங்கையில் பயிற்சி பெற்ற 425 தாதியர்களை அமெரிக்காவிற்கு அனுப்ப அமெரிக்காவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எனினும் விண்ணப்பித்தவர்களில் 3 விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆங்கிலப் புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற்று அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் தாதியர் பணிகளை பெற முடிந்தது.
1.6 மில்லியன் வேலை வாய்ப்புகள் பெறப்படல்
கடந்த 2014ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடையில், இலங்கை பல அபிவிருத்தியடைந்த நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் திறமையான மற்றும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு 1.6 மில்லியன் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளது, ஆனால் இந்த பணிகளுக்கு 37,000 இலங்கையர்களை மட்டுமே அனுப்பியுள்ளது.
ஜப்பானில் மட்டும், தகவல் தொழில்நுட்பத் துறையில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன ஆனால் எவரும் அனுப்பப்படவில்லை.
ஜப்பான், கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில், பயிற்சி பெற்ற பணியாளர்களை
அனுப்பும் வாய்ப்புகள் இருந்தாலும், அதற்கு ஏற்ற மொழிப் புலமை மற்றும் தொழில்
திறன் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவதால், இலங்கையில் இருந்து வெளிநாடு
செல்லும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக
தெரியவந்துள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
